மதுவிலக்குக் கோரி தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், எதிர்பாராத விதமாக இன்று மரணமடைந்தார்.

                                    மதுவிலக்குக் கோரி தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், எதிர்பாராத விதமாக இன்று மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடைப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை மூடக் கோரி அருகே இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார் சசிபெருமாள். கிட்டத்தட்ட 5 மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் போகவே, தீயணைப்புப் படையினர் அவரை செல்போன் டவரிலிருந்து கீழே இறக்கினர். மயக்க நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பீகாரில் 1500 ஆசிரியர்கள் ராஜினாமா.

                           பீகாரில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பிட் அடிப்பதற்கு பெற்றோர்களும்,  உறவினர்களும் உதவிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பீகாரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1500 பேர் தங்களின் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

New Transfer Norms 2015-16 Published Now.

அரசு கடித எண் 263 நாள்: 28.7.2015 

       ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும்  கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.


Latest Downloads
 1. DEE - Transfer Schedule 2015 - 16  -Click Here
 2. DEE - Transfer Regarding Proceedings - [PDF Download] - Click Here
 3. ltr No: 263 Date: 28.7.2015 | New Transfer Norms 2015-16 [PDF Download] - Click Here
 4. GO 232 Date: 10.7.2015 | Transfer Norms 2015-16 [PDF Format Download] - Click Here
 5. AEEO to Middle HM Transfer Counselling Instructions & Form - Click Here
 6. Promotion Panel Based on 1.1.2015 - Click Here
 7. Transfer Applications

பெட்ரோல்,டீசல் விலை ரூ.4 குறைவு.

                         பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலைக் குறைப்பு விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்

விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்
      மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.

6% அகவிலைப்படி உயர்வு கணக்கீடு:

அக்.15 இளைஞர் எழுச்சி நாள்; அப்துல் கலாம் பெயரில் விருது- தமிழகஅரசு அறிவிப்பு

            விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Employment Exchange Statistics - Community-wise break up of job seekers waiting on the rolls as on 30th June 2015

உடல் உறுப்புகளை தானமளியுங்கள்; ஓட்டுநர் உரிமம் பெறுங்கள்: விரைவில் வருகிறது புதிய நடைமுறை

   ஒருவர் தனக்கு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது, 'ஒரு வேளை தான் சாலை விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடல் உறுப்புகளையோ அல்லது உடல் திசுக்களோ தானமாக அளிக்கிறேன்' என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுவதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

03.08.2015-வல்வில் ஓரி விழா-நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

         நேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 
 

தமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு:தடை விதிக்க ஐகோர்ட்மறுப்பு

       மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, தமிழகத்தில், 7,243 நர்ஸ் தேர்வு அறிவிப்புக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி செவிலியர் சங்கத்தின் தலைவர், பூமி, தாக்கல் செய்த மனு:

மக்கள் வெள்ளத்தில் சரித்திர நாயகன் கலாமின் இறுதிச் சடங்கு.

             மக்கள் வெள்ளத்தில் சரித்திர நாயகன் கலாமின் இறுதிச் சடங்குக்கான

பணிகள் நடைபெற்றன

பெற்றோர்களுக்கு அப்துல் கலாம் விடுத்துள்ள வேண்டுகோள்.

                 பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துவிட்டு, குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார். மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கத்தின் 90-ஆம் ஆண்டு விழாவில் டிஜிட்டல் ஆல் அமைப்பைத் தொடக்கிவைத்து அவர் பேசியது

10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழு விவரங்களையும் பள்ளி அளவில் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர்(பொறுப்பு) வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
 

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்
  கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

 ஒற்றை பெண் குழந்தை இந்திரா காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியருக்கான கல்வி உதவிதொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி.,) வெளியிட்டுள்ளது.  
 

மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்பிரமணிய பாரதி மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் இடம் பெற உள்ளது.          இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்களின் புகைப்படங்களை அஞ்சல் தலைகளாக வெளியிட்டு அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை செலுத்தி வருகிறது. 6 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஞ்சல் தலையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. 

TNPSC: குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

      அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241 காலியிடங்களுக்கு, கடந்த 26ம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்

     மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஆதிதிராவிடர் ஆசிரியர் கவுன்சிலிங் துவக்கம்

           ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்தது.

TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

        முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சிலிங் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '30ம் தேதி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு

        சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு (சி.டி.இ.டி.,) நடத்தப்படுகிறது. 
 

30/07/2015 அன்று நடைபெற இருந்த ஆதி திராவிட நல பள்ளிகளின் பொதுமாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்து உத்தரவு


ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி


     முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட்சிகள் ரத்து என, யார் நிர்பந்தமும் இல்லாமல், அனைத்து அமைப்பினரும், தானாக முன்வந்து அறிவித்துள்ளனர். அரசு முழு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் இயங்காது. 

கடல்சார் கல்வி பயிலும் மீனவ இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை

      விருதுநகர் மாவட்டத்தில் கடல்சார்ந்த கல்வி பயிலும் மீனவ இளைஞர்களிடம் கல்வி உதவித் தொகை பெற மீனவள உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு.
6-8-2015 வரை விண்ணப்பம் பெறப்படும்.
8-8 -15 முதல் கலந்தாய்வு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
         இது குறித்து உறுதியான தகவல் கிடைத்தபிறகு நம் காஞ்சிகல்வி இணையத்தில் வெளியிடுவோம்.

மேதகு APJ அவர்களுக்கு கூகுள்-ன் அஞ்சலி

மேதகு APJ அவர்களுக்கு கூகுள்-ன் அஞ்சலி  செலுத்தும் விதமாக

TNPSC Group 2 Official Answer Keys:


 • TNPSC Group 2 Exam Official Answer Key (General Tamil) - Click Here ++New++

 • TNPSC Group 2 Exam Official Answer Key (General English) - Click Here  ++New++

 • TNPSC Group 2 Exam Official Answer Key (General Studies) - Click Here  ++New++

சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு

       சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.  

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

        'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்

         அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.

மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

       அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும் மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்குஇம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்

                        அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் ரூ.3,000 சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் 2012 நவம்பரில் துப்புரவாளர்கள் என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் 2,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாணை வெளியிடப்படும். இந்நிலையில் இம்மாதம் ஊதியம் பெறுவது குறித்து நேற்றுவரை எந்த உத்தரவும் இல்லை.

கல்விகடன் திட்டத்திற்கு கலாம் பெயர்; டில்லி அரசு அறிவிப்பு

          புதுடில்லி : பள்ளி கல்வியை முடித்து கல்லுாரியில் இணையும் மாணவ, மாணவியர்களுக்கு, ரூ 10 லட்சம் வரையிலான் கல்வி கடன்களை டில்லி அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

எனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்திருந்த கலாம்!

நாட்டை வல்லரசாக்க வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்றும், கூடுதலாக ஒருநாள் வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
 

சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு

       சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015IMPORTANT DATES: 
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015 
Last date for Online Submission of application 19-08-2015 

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது!

     பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர்   சவுந்தரராஜன் 52. இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல் கட் அடித்தனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

         மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள் மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்

கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்


       கற்பித்தலில் அலட்சியம் காட்டியும், பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ”ஐ லவ் யு” சொன்ன மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பதவி இறக்கம்:

அப்துல் கலாம் இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதால் புல்வெளிகள், மரங்களுடன் கூடிய இயற்கை எழிலுடன் நினைவிடம் கட்டப்படுகிறது.


        பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை.

ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள்.

                        ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என பட்டதாரி ஆசிரி யர்கள் ‘தி  இந்து’ உங்கள் குரல் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்.


                             ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும்,  இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

Flash News: கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை.

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்த

ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வ விடுமுறையை ஆளுநர் ரோசய்யா அறிவித்துள்ளார்.

விடுமுறை குறித்து முறையான அறிவிப்பு இல்லை: கடும் அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள்.


தமிழக அரசின் முறையான அறிவிப்பு இல்லாததால், பள்ளி, கல்லுாரிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

         மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Group 2 Exam Answer Key

 • TNPSC Group 2 Exam Answer Key ( Theni IAS Academy) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Sri Malar Academy) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Vidiyal Arni - Low Resolution ) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Vidiyal Arni - High Resolution) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( NR IAS Academy) - Click Here *New*..thanks to trb tnpsc

 • TNPSC Group 2 Exam Answer Key ( Appollo ) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Mamallan ) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Minarva ) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Asian Visac ) - Click Here *New*
 • TNPSC Group 2 Exam Answer Key ( Radian ) - Click Here *New*

கலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு


        முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
 

கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

                              கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  

"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

Image result for abdul kalam photos
               கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். 
அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர்

கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு

                       இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உடல்நலக்குறைவால் அப்துல் கலாம் காலமானார்.

                      Image result for crying
              முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,83 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.